இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த கட்டளைக்கு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த கட்டளைக்கு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்
  • :
2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள கட்டளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2026 ஜனவரி 5ஆம் திகதிய 2470/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டளை 2026.05.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் ஊடாக குற்றவியல் கருமங்களில் இருதரப்பும் பரஸ்பர நீதி ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.
 
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, பயங்கரவாாதத்துடன் தொடர்பான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காகவுள்ள நிதிகளைச் குற்றச் செயல்களின் வரும்படிகள் மற்றும் சாதனங்களையும் கண்டறிதல், தடை செய்தல், இழப்பித்தல் மற்றும் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்தல், புலனாய்வு செய்தல், வழக்குத் தொடருதல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான குற்றவியல் கருமங்களில் ஒத்துழைப்பதனூடாகவும் பரஸ்பர சட்ட உதவியளிப்பதனூடாகவும் பொருத்தனையின் இரு திறத்தவர்களின் பங்கும் மேம்படுத்தப்பட்ட பயனுறுதியுடன் சம்பந்தப்பட்டதாகின்றது.
 
நீதித்துறையில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டின் பின்னர் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையினால் இது வரையில் 2647 வெற்றிடங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் நீதித் துறையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இவற்றுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles