கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், இலங்கை நிலைபெறு வலுக்தி அதிகாரசபை, வலுசக்தி அமைச்சு மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையை காப்போம் பாடசாலை எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாணவர்களை மையமாகக் கொண்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மூலம் அவர்களிடையே மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி, அந்தச் செய்தியை பிள்ளைகள் ஊடாக பெற்றோருக்கும் சமூகத்திற்கும் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் எரிசக்தி பாதுகாப்புச் சுவர் (Energy conservation wall), அறுபது வினாடி யோசனை (60-second idea), எரிசக்தி பதிவுப் புத்தகங்கள் (Energy log books) மற்றும் மின்சார வினைத்திறன் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள் பல இன்று பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.


