பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவை
  • :
புது வருட காலத்திற்காக புகையிரதப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை புகையிரத திணைக்களம் விசேட புகையிரத சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

 அதன் படி இம்மாதம் அதாவது இன்று (10) முதல்,11,12,15,16,17,18 மற்றும் 19 ஆகிய தினங்களுக்காக இந்த விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடும்.

அவ்வாறே இக்காலப் பகுதியில் பயணிக்கும் சகல புகையிரதங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.railway.gov.lk இல் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மேலும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles