மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தியால் இயக்கப்படும் மின்பகுப்பின் மூலம் உற்பத்தியாகின்ற பசுமை ஐதரன், கப்பல்துறை, விமான சேவைகள் மற்றும் உலோகக்கைத்தொழில் காபன் நீக்கப்பட்ட 'எதிர்கால எரிபொருளாக' தற்போது உலகளாவிய ரீதியில் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மின்சார தேவைகளை விஞ்சிச் செல்வதற்கு, 56 கிகாவாற்றை விஞ்சிய பாரிய கரைகடந்த காற்று ஆற்றல்வளமொன்று இலங்கையில் இருக்கின்றமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேலதிக மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி பசுமை ஐதரசன் உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்கான இயலுமை இருப்பதுடன், பூகோள ரீதியாக இலங்கை அமைந்திருப்பதன் அனுகூலங்களைப் பயனாக்கி பசுமை ஐதரசனை உற்பத்தி செய்யும் கருத்திட்டத்தை ஆரம்பித்து உலகளாவிய ஏற்றுமதி வழிகளுக்கு அணுகுவதற்கான ஆற்றல்வளம் இலங்கையில் இருக்கின்றது.
அதற்கமைய, 2025.08.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் பொதுமக்களின், ஏற்புடைய ஏனைய தரப்பினர்களின் மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் பதிலளிப்புக்களைக் கருத்தில் கொண்டு, பசுமை ஐதரசன் துறைக்கான கொள்கைப் பணிச்சட்டக வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய. குறித்த தேசிய கொள்கையை அமுல்படுத்துவதற்கும், அதுதொடர்பான செயற்பாட்டு வழிமுறை வழிகாட்டல், செயற்பாட்டு வரைபு மற்றும் ஒழுங்குவிதிகளைத் தயாரிப்பதற்கும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


