பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (10 ஜூன்) கொழும்பிலுள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற ரஷ்ய தேசிய தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ உபாலி பன்னிலாகே இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ரஷ்ய தூதுவர் மேதகு Levan S. Dzhagaryan, வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
இந்நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
முப்படைகளின் தளபதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


