🔷 வவுனியா, மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாக செலவிட வேண்டிய முறை
🔷 மக்கள் நேய அரசு சேவையொன்றை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
2025 வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா, மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாக செலவு செய்ய வேண்டிய முறை மற்றும் மக்கள் நேய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்கவின் தலைமையில் இன்று (29) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், அமைச்சு அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA), இலங்கை போக்குவரத்து சபை (SLTB), தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT), பேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI) இலங்கை புகையிரதம் உட்பட திணைக்களத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.