மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தற மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
தீவின் சில பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான கன மழை பெய்யலாம். வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு(30-40) கிலோ மீட்டர் வேகமளவில் கடும் காற்று வீசலாம்.
இடி யுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது