இன்று (27) உலக சுற்றுலா தினம் ஆகும். இந்த ஆண்டு இதன் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்பதாகும். உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) இந்த நாளை 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தது, அதன் கொண்டாட்டம் 1980 இல் ஆரம்மிக்கப்பட்டது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத்துறை முக்கியமானது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வறுமையைக் குறைக்கவும், கலாச்சார பரிமாற்றங்களை வளர்க்கவும், பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்பவும் உதவுகிறது.
1997 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற அதன் பன்னிரண்டாவது அமர்வில், உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தில் அமைப்பின் பங்காளியாக பணியாற்ற ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஹோஸ்ட் (host) நாட்டை நியமிக்க UNWTO பொதுச் சபை தீர்மானித்தது.
அதன்படி, இந்த ஆண்டு சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட் மலேசியா ஆகும்.


