இத்தாலி தூதுவர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இத்தாலி தூதுவர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
  • :

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இணை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ள இத்தாலி தூதுவர் மேதகு திரு. Damiano Francovigh, நேற்று (29 ஏப்ரல்) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

சந்திப்பின்போது, இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். குறிப்பாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் இத்தாலி தூதுவருக்கு இதயம் கனிந்த வரவேற்பை அளித்தார்.

தூதர் Francovigh, இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையேயான நீண்டநாள் நட்புறவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன், பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படு உறுதியளித்தார்.

Related Articles