சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான மீளாய்வும், 2026 ஆம் ஆண்டுக்கான முன்-பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான மீளாய்வும், 2026 ஆம் ஆண்டுக்கான முன்-பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல்
  • :

 

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான மீளாய்வும், 2026 ஆம் ஆண்டுக்கான முன்-பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலும் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவைக்கு முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையை புதிய மாற்றமொன்றுக்கு உட்படுத்தும் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.


சுகாதாரத் துறையில் எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான உபகரணங்கள் கொள்வனவின் போது, ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கும் வகையில் கொள்முதல் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்தல் குறித்தும், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் மருந்துகள் கொள்வனவின் போது மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.


ஊடகத் துறை தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து புதிய வடிவிற்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related Articles