கிராமிய பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் பள்ளேபோல மற்றும் உக்குவளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள ஐந்து விகாரைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி பள்ளேபொல ஸ்ரீ சுமண புஷ்பராமய, ஸ்ரீ விஜயசுந்தர மண்ணின்தாராம புராண விகாரை, ஸ்ரீ சுமனாறாமய, வரலாற்று சிறப்புமிக்க தெதிஸ்பலருக ஸ்ரீ மகா போதிராஜ கல்லென் ரஜமாஹா விகாரை, வெகிகள பூஜா கொட புராண விகாரை போன்ற விகாரைகளில் சன்யாவாச, தர்மசாலா, விகாரஸ்தான போன்றவை புனரமைக்கப்பட்டு வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
ஒரு விகாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக
5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


