பல சிக்கல்கள் காரணமாக நீண்டகாலமாக தாமதமாகிய உமா ஓயா திட்டத்தின் மீதமாகவுள்ள பணிகளை, இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்தள்ளது.
இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரரான Farab நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள தினத்திற்கு முன்னர் முடிக்க முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


