ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை சந்தித்தனர்

ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை சந்தித்தனர்
  • :
ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவை சந்தித்தனர்.

 

பாராளுமன்றத்தில் நேற்று (18) இடப்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, பாராளுமன்ற உள்ளக கணக்காய்வாளர் தினேஷ் விதான மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
 
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்ததுடன் இது அவர்களது முதலாவது விஜயம் எனத் தெரிவித்தனர். ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் கட்டமைப்பு, அதிகாரிகளை நியமித்தல் மற்றும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் விதம் என்பன தொடர்பில் பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன், இலங்கையிலுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலை அடுத்து இந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.

Related Articles