பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன

பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன
  • :

பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். அத்துடன், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள், பிள்ளைகளை தங்கள் பிள்ளைப் பருவத்தை அதே வழியில் கழிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற பணியளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில், பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே கௌரவ சபாநாயகர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற பணியாளர் நலன்புரி மற்றும் விசேட திட்டக் குழுவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 375 பாராளுமன்ற பணியளர்களின் பிள்ளைகளுக்கு 587 புத்தகத்தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சியில் முதன் முறையாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகள் மற்றும் பாடசாலைக் கல்வி கற்கும் போதே இலங்கையில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற கலாசார, விளையாட்டு மற்றும் அழகியல் துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை மற்றும் வருடாந்தம் இத்திட்டம் வெற்றியளித்து வருகின்றமை குறித்து நினைவு கூர்ந்தார்.
அத்துடன், பாராளுமன்ற பணியாளர் நலன்புரி மற்றும் விசேட திட்டக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன கருத்துத் தெரிவித்த போது, கல்வி ஒரு முதலீடு என்றும், அந்த முதலீட்டில் ஒரு பங்காளராக இருப்பது ஒரு பாக்கியம் என்றும் தெரிவித்தார். 1996 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து மேற்கொள்ள முடித்தமை தொடர்பிலும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் கலந்து கொண்டனர்.

Related Articles