க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் 

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் 
  • :

இம்முறை க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலை உருவாகக்கூடிய அனர்த்தத் தடைகளை தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து விசேட  வேலைத்திட்டம் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக தேசிய மட்டத்திலிருந்து மாவட்ட மட்டம் வரை சம்பந்தப்பட்ட சகல பிரிவுகளுக்கும் தெளிவுபடுத்தும் நிகழ்வு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற சம்பத் கொடுவேகொட தலைமையில் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இத்திட்டத்தை செயற்படுத்துவதனால் இம்முறை சாதாரண பரீட்சை  காலப்பகுதியில் அனர்த்தத்தினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளை வெற்றிகரமாக தகர்த்து சாத்தியமான முறையில் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு அவசியமான சூழலை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இம்முறை சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், பரீட்சைக் கடமைகளுக்காக சம்பந்தப்படும் அதிகாரிகள், அனர்த்தம் காரணமாக எதிர்கொள்ளக் கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசர பதில்களை வழங்குவது குறித்த, பொறிமுறையைப்  பலப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள்  இந்த ஒருங்கிணைந்த திட்டத்தினால் எடுத்துக்காட்டப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால், பரீட்சைகள் திணைக்களத்துடன்,  பொலிஸ் உட்பட அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் பரீட்சை  நடைபெறும் காலப்பகுதியில் மேற்கொள்வதற்காக அவசியமான வழிகாட்டல்களை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு தற்போது  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் இடம்பெற்று மாணவர்களுக்கு அனர்த்தத்தினால் பரீட்சைக்கு சமூகம் அளிக்க முடியாத தடை நிலை காணப்படுமாயின், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117 அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஒருங்கிணைப்பு அவசர  செயற்பாட்டு அறை இலக்கமான 0113 668020/ 0113 668100/ 0113 668013/ 0113 66010/ மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அல்லது பரீட்சைகள் திணைக்கள அவசர அழைப்பு 1911 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிப்பதனால்,  விரைவாக அந்தத் தடைகளை நீக்குவதற்கு அவசியமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பரீட்சைக் காலப் பகுதியில் அனர்த்தத்தினால் உங்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கக்கூடிய தடைகளைக் குறைப்பதற்காகத தயாரிக்கப்பட்ட அவசர அனர்த்த பதிலளிப்பு தயார்நிலைத் திட்டத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சாதாரண தரப் பரீட்சையின் போது ஏற்படக்கூடிய இடையூறுகளை முகாமை செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட அவசர அனர்த்த பதில் தயார் நிலைத் திட்டம்

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]