களனி கங்கையின் வலது கரையில் உள்ள களனி வெள்ளத் தடுப்பு அணைக்கட்டு உடையும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கொழும்பு வலய நீர்ப்பாசன பணிப்பாளர், பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
அத்தகைய ஆபத்து எதுவும் இல்லை என்றும், நீர்ப்பாசனத் திணைக்களம் அந்த இடத்தில் ஏற்பட்ட சிறிய நீர் கசிவை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்உள்ளார்..


