மாவில் ஆறு சுரங்கம் மற்றும் அதன் அணைக்கட்டும் இடிந்து விழும் அபாயத்தில் - விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்

மாவில் ஆறு சுரங்கம் மற்றும் அதன் அணைக்கட்டும் இடிந்து விழும் அபாயத்தில் - விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்
  • :

மாவில் ஆறு சுரங்கம் மற்றும் அதன் அணைக்கட்டும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


மகாவலி கங்கையில் தற்போது பாரியளவு நீர் பாய்ந்து வருவதாகவும், மாவில் ஆறு நீர்த்தேக்கமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஒரே நீர்த்தேக்கமாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.


மாவில் ஆறு நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப் பகுதியில் வசிக்கும் மக்களும், அதைச் சுற்றியுள்ள பிரதேசவாசிகளும் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles