மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்ஃப் எயார் கொழும்பு விமான சேவைகள், மே 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்ஃப் ஏயார் அறிவித்துள்ளது.
தினசரி சேவையாகத் ஆரம்பிக்கப்படும் இந்த விமானங்களுக்கு, வழக்கம் போல் ஏர்பஸ் ஏ 320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும், பஹ்ரைனிலிருந்து மாலைதீவுகள் வழியாக கொழும்புக்கும், அங்கிருந்து பஹ்ரைனுக்கும் விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


