அரசாங்கம் மசாகு எண்ணெயை கொள்வனவு செய்தது சரியான விலையில் தான் என வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தெரிவித்தார். எனினும் ஏதோ ஒரு ஊடகம் ஒன்று அதனை வேண்டுமென்றே திரிபுப்படுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெளிவு படுத்தினார்.
அரசாங்கம் உலக சந்தையில் சுட்டிப் பெறுமதிகளுக்கு அமைவாக மசகு எண்ணெயை கொள்வனவு செய்துள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் ஏப்ரல் இரண்டாம் திகதி 286 அமெரிக்க டொலர்களுக்கு டீசல் கொள்வனவு செய்ததாகவும், அதன் போது உலக சந்தை சுட்டிப் பெறுமதி 291 அமெரிக்க டாலர்களாக இருந்ததாகவும் தெரிவித்தார். அந்த சுட்டி பெறுமதியை விடவும் குறைந்த விலைக்கு அதில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முடியுமாயின் மசகு எண்ணெய் பரல் ஒன்றை 286 அமெரிக்க டாலர்களுக்கு கொள்வனவு செய்ததாக நிரூபிக்குமாறு சவால் விடுவதாகவும் இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்


