2025 ஆம் ஆண்டில் மேல் மாகாண சபையின் விதிமுறைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று களுத்துறை மாவட்ட செயலகத்தின் பிரதான அரங்கில், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளான மாதுகம, பண்டாரகம, பெருவளை, ஹொரண, மதுவளை, மில்லனியா, அகலவத்தை, களுத்துறை, வலல்லவிட்ட, பலிந்தனுவர, டொடங்கொட, பனதுறை, இங்கிரிய, புலத்சிங்கல ஆகியவற்றில் உள்ள 70 பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டு, ஒவ்வொரு விளையாட்டுக் கழகத்திற்கும் ரூ. 50,000 பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஒஷானி உமங்க, சஞ்சீவ ரணசிங்க, சந்திமா ஹெட்டியாராச்சி, தனுஷ்க ரங்கநாத், நிலாந்தி கொட்டஹாச்சி, களுத்துறை மாவட்ட செயலாளர் ஜி.எம்.ஜானக கே.குணவர்தன மற்றும் விளையாட்டுக் கழகங்களின் செயலாளர்கள், தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
.


