காமன்வெல்த் (common wealth) நாடுகளின் சுகாதார ஒருங்கிணைப்பு மாநாடு ஜெனிவாவில் நடைபெறுகிறது.

காமன்வெல்த் (common wealth) நாடுகளின் சுகாதார ஒருங்கிணைப்பு மாநாடு ஜெனிவாவில் நடைபெறுகிறது.
  • :

“பொது நலவாய அமைப்பின் ஊடாக புற்றுநோயின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” “Shaping the Future of cancer across the common wealth” என்பதே கருப்பொருளாக இருந்தது. லான்செட் ஆன்காலஜி காமன்வெல்த் Lancet oncology common wealth அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

பொதுநலவாய செயலகத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மற்றும் கயானாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெச்.இ.லெஸ்லி ராம்சாமி (H.E.Leslie Ramsammy) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இலங்கையின் சுகாதார அமைச்சராகவும், உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்திய மாநாட்டின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர். அனில் ஜாசிங்க, டொக்டர் எஸ்.ஸ்ரீதரன், இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி திரு. சுமித் தசநாயக்க உட்பட இலங்கையின் சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்துகொண்டனர்.

79வது உலக சுகாதார மாநாடு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையகத்தில் மே 23 வரை நடைபெற உள்ளது.

 

Related Articles