நிலச்சரிவுகள் ஏற்பட்ட பின்னர் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ள வீதிகளில் பயணிக்கும் போது சாரதிகள் அவதானமாக பயணிக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் வலியுறுத்தியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பல வீதிகளில் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
அதன்படி, கண்டி-உடுவெல வீதி வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதுடன், அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, எனவே, குறிப்பாக இரவில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.


