கடந்த 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் 904 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர

  • :
கடந்த 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் 904 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்தார்.

 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் ரூ.441 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதை விட அதிகமாக ரூ.904 பில்லியன் வருமானம் ஈட்ட முடிந்தமை குறிப்பிடத்தக்கது என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (20) காலை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் ரூ.463 பில்லியன் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles