கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்தார்.
இதன்படி, இராணுவ மரபுகளின்படி நடைபெற்ற இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், 26ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் கடற்படை தளபதியினால் ஜனாதிபதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.