பல் செயற்பாட்டு அபிவிருத்தித் திட்டமாக நிருமாணம் நடைபெறும் மகாவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கீழ் மல்வத்து ஓயா நீர்த் தேக்கத்தின் நிருமாணப் பணிகளை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுனில் ரணசிங்க அண்மையில் மேற்பார்வை செய்தார்.
இத்திட்டத்திற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 3,000மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நீர்த்தேக்க நிருமணத்தின் ஊடாக காணி இழப்பவர்களை மீளக்குடியமர்த்தும் போது அதிகூடிய வசதிகளை வழங்குவதற்காகவும், காட்டு யானைகளின் பாதிப்புகளை அதிகரிப்பதற்கு இடமளிக்காது – நாட்டில் நீண்ட கால மற்றும் நிரந்தரத் தீர்விற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் விரிவாக திட்டத்தை பொறுப்பெடுத்து செயற்படும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அனுராதபுர மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


