ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.
கிராம மட்டங்களில் பணி புரிகின்றவர்கள் கிராம மட்ட புள்ளிவிவரத் தரவுகளை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். காலத்திற்கு காலம் தொடர்ச்சித் தன்மையுடன் அவற்றை புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்கு இவை அடிப்படையானவை. இல்லையேல் சிறு சிறு தவறுகள் கூட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்து என்று இங்கு கருத்துத் தெரிவித்த பதில் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது திறமைகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியாக இது வழங்கப்பட்டது.
குறித்த பயிற்சி நெறியில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் அவர்களும், பங்கேற்பு அடிப்படையிலான கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ளு.P அமல்ராசா ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டிருந்தனர்.
ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.