நுகர்வோரை சுரண்டி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களுக்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தினால் அண்மையில் (2025.12.16) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை:
பிலியந்தல, பொல்கஸ்ஓவிட்ட, போகுந்தர மற்றும் மடபாத ஆகிய பகுதிகளில் உள்ள 4 வர்த்தக நிலையங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், ஒரு நிலையத்திற்கு தலா ரூ. 100,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
குடிநீர் போத்தல்களை (Bottled Water) அதிக விலைக்கு விற்றமை:
கெஸ்பேவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இக்குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அந்நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் (500,000) அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.
பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.


