இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம் (Saudi Post Corporation) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம் (Saudi Post Corporation) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்
  • :

இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையேயான இராஜதந்திர உறவுகளுக்கு 50 வருட நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீட்டிற்கு அமைச்சரவை அனுமதி  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

நேற்று முன்தினம் (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

2024 ஆம் ஆண்டாகும் போது இலங்கைக்கும் சவூதி அரபியா நாட்டுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஜம்பது (50) ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகளைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கும், மற்றும் இருநாட்டு மக்களிடையே பரஸ்பர நல்லுறவை விருத்தி செய்வதற்குமான நோக்கங்களுடன் இருநாடுகளின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடங்களை மையமாகக் கொண்டு நினைவு முத்திரைகள் இரண்டை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 

அதற்கிணங்க, குறித்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் சவூதி அஞ்சல் கூட்டுத்தாபனம் (Saudi Post Corporation) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

 

 

Related Articles