க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய திட்டத்திற்கு இணங்க, நீண்ட காலமாக புதர் மண்டி கிடந்த கித்துலாவில கிராம அலுவலர் பிரிவில் உள்ள க்ரசண்ட் பூங்கா விளையாட்டு மைதானம் மற்றும் கித்துலாவில வீதியின் இருபுறமும் சமீபத்தில் (18) சுத்தம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் க்ரசண்ட் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பழ மரங்கள் மற்றும் மூலிகைகள் நடுவதும் அடங்கும்.


