கொழும்பு நகர்ப்புற வலயத்திலுள்ள கால்வாய்கள் மற்றும் நடைபாதைகளை பராமரிக்க ஒருங்கிணைந்த நிறுவன ரீதியிலான திட்டத்தை அமுல்படுத்துங்கள் -நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர-
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள், வடிகாலமைப்புக் கால்வாய்கள் மற்றும் நடைபாதைகளை முறையாகப் பராமரிப்பதற்கு, நிறுவன ரீதியான ஒருங்கிணைந்த திட்டத்திற்கு அமைவாகச் செயற்படுமாறு நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
மஹரகம நகர சபை எல்லைக்குட்பட்ட தலவத்துகொட நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள கால்வாய்கள், நடைபாதைகளின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக நேற்று (25) மேற்கொண்ட கள ஆய்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்


