கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள 02 கதிரியக்க இயந்திரங்கள் செயலிழந்துவிட்டதாகவும், ஆனால் நோயாளிகளின் கதிரியக்க பரிசோதனைகளை நடத்துவதற்கான மாற்றுத் திட்டம் மருத்துவமனையில் நடைமுறையில் இருப்பதாகவும் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பி.ஏ.எல். ரணவீர தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 02 கதிர்வீச்சு பரிசோதனை இயந்திரங்கள் செயலிழந்ததால் கதிர்வீச்சு பரிசோதனை நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக வினவியபோது பதிலளிக்கும் விதமாக பிரதி பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தைத் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு பழுதடைந்த இரண்டு இயந்திரங்களும் பழைய கதிர்வீச்சு பரிசோதனை இயந்திரங்கள் என்றும், அவசர சிகிச்சைப் பிரிவில் செயல்படும் நிலையில் இருந்த ஒரே கதிர்வீச்சு இயந்திரம் கடந்த திங்கட்கிழமை செயலிழந்ததாகவும் சுட்டிக்காட்டிய தேசிய மருத்துவமனையின் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகம், கதிர்வீச்சு பரிசோதனை இயந்திரத்தை சீர்செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மற்றைய கதிர்வீச்சு பரிசோதனை இயந்திரம் முன்னர் செயலிழந்துவிட்டதாகவும், பழைய இயந்திரத்தில் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கதிர்வீச்சு பரிசோதனை இயந்திரங்கள் இரண்டையும் வழமைக்குக் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சு மற்றும் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் பிரிவிற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அவ்வியந்திரத்தை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவ வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்
பிட்டார்.