-
குறிக்கோளுக்கும் தரத்திற்கும் சேவை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் முன்னுரிமை - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க
குறிக்கோளுக்கும் தரத்திற்கும் சேவை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் முன்னுரிமை வழங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்காக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கட்டுமானத் துறையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகளுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் அண்மையில் கலந்துகொண்டு அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அதன்படி, நெடுஞ்சாலை அபிவிருத்தி, அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பகுதிகளை நிறைவு செய்தல், பாலங்கள், திட்டங்கள், போக்குவரத்து சமிக்ஞை முறைமைகளை நவீனமயமாக்கல், கிராமப்புற சாலை அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு, பல்நோக்குப் போக்குவரத்து முனையத் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்திப் பணிகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.