வடக்கின் மற்றும் கிழக்கின் சில அரசியல் கட்சிகள் மக்களை வழிகெடுத்து, அவர்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடுசெய்வதற்காக செயற்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் காணப்படும் இராணுவ முகாம்களை மீள அமைக்கும் திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதன்படி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையான் கட்டு சிவ நகரில் அமைந்துள்ள பன்னிரண்டாவது சிங்க ரஜிமேந்து அணி அமைந்துள்ள முகாமை மீள அமைக்கும் திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த இராணுவ முகாம்களுக்குள் அனுமதி இன்றிய ஐந்து நபர்கள் உள்நுழைந்ததாகவும், அந்த நபர்களை திருப்பி அனுப்புவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்த நபர்களை திருப்பி அனுப்பும்போது ஒருவர் மாத்திரம் முல்லைத்தீவு, முத்தையான்கட்டு வாவியில் பாய்ந்து இறந்தார்.
வாவியில் மூழ்கி மரணம் அடைந்த அந்த நபருக்கு ஏதேனும் தாக்குதல் நடந்துள்ளதாக சில சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அதன்படி ஒரு படைவீரர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் மேலும் இரண்டு வீர படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது படை வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் சிவில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி சில அரசியல் குழுக்கள் இலாபம் பெறுவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


