லாக்ஷா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக தொழில் அமைச்சு ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது”

  • :

“லாக்ஷா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக தொழில் அமைச்சு ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது”


- தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

கண்டியில் நடைபெற்ற லங்காரா 2025 கண்காட்சியின் 2வது நாளில், லக்ஷா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பாரம்பரிய கைவினைஞர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நேற்று (23) விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த கண்காட்சி குறித்துப் பேசிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி, ஹபுவிந்த லக்ஷா கிராமத்தை சர்வதேச அளவில் ஒரு பிராண்டாக எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் மற்றும் அதை சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். லக்ஷா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் தொழில் அமைச்சு ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்தும் என்றும், இதற்கு தேசிய வடிவமைப்பு மையத்தின் பங்களிப்பு மேலும் தேவை என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles