மண்சரிவு அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை

மண்சரிவு அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை
  • :

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை

தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் காணப்படுவதாக அபாய எச்சரிக்கையை தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்கை, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் ஹொறனை, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பிரதேசம் ஆகியனவற்றுக்கு விழிப்புடன் செயற்படுமாறு மஞ்சள் எச்சரிக்கை ஒன்றை தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Articles