மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2,447 டின் மீன்கள் அழிக்கப்பட்டன

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2,447 டின் மீன்கள் அழிக்கப்பட்டன
  • :

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அண்மையில் கொஸ்கம பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தரமற்ற டின் மீன்கள் தொடர்பான வழக்கு இன்று (16) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சம்பந்தப்பட்ட நபருக்கு,  நீதிமன்றம் ரூ. 20,000/- அபராதம் விதித்து, வழக்குப் பொருளாக சமர்ப்பிக்கப்பட்ட  2,447 டின் மீன்களையும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி,  நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைள, மேற்படி டின் மீன்கள் இன்று அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன.

சோதனைக்கான காரணங்கள்:

  • வாடிக்கையாளரை தவறாக வழிநடத்தும் வகையில் லேபிள்கள் இல்லாமல்/சீல் செய்யப்படாத டின் மீன்களை சேமித்து வைத்தல்.
  • SLS தரச் சான்றிதழ் இல்லாதது.
  • தேவையான பில்களை வைத்திருக்கத் தவறியது.

Related Articles