“92 பெட்ரோல் இல்லை” என கூறி, இரவு நேரத்தில் யூரோ 3 பெட்ரோல் விற்பனை செய்த எரிபொருள் நிலையம் முற்றுகை

“92 பெட்ரோல் இல்லை” என கூறி, இரவு நேரத்தில் யூரோ 3 பெட்ரோல் விற்பனை செய்த எரிபொருள் நிலையம் முற்றுகை
  • :

இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி, 92 ஆக்டேன் பெட்ரோல் இல்லை என பொய்யாக கூறி, அதற்கு பதிலாக அதிக விலை கொண்ட யூரோ 3 (Euro 3) பெட்ரோலை விற்பனை செய்வதாக, நாட்டின் சில எரிபொருள் நிலையங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) தகவல்கள் கிடைத்திருந்தன.

இந்த தகவலின் அடிப்படையில், களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், நேற்றுமுன்தினம் (14) இரவு பெருவளை பகுதியில் உள்ள முக்கிய எரிபொருள் நிலையம் ஒன்றை திடீர் முற்றுகைக்கு உட்படுத்தினர்.

முற்றுகையின் போது வெளிப்பட்ட தகவல்கள்:

நுகர்வோருக்கு வழங்காமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6,400 லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோல் கையிருப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இரவு நேரங்களில் 92 ஆக்டேன் பெட்ரோல் இல்லை என கூறி, யூரோ 3 பெட்ரோலை விற்பனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளே அறிவுறுத்தியதாக, எரிபொருள் நிலைய நிர்வாகம் விசாரணையின் போது தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கைப்பற்றப்பட்ட எரிபொருள் கையிருப்பு அதிகாரிகளின் பாதுகாப்பில் எடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களுக்கு எதிராக நாளை களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

Related Articles