தென் மாகாணத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முன்னோடி திட்டத்துடன் இணைந்து, தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் உள்ள அனைத்து பேருந்து சங்க பிரதிநிதிகளுகளையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் காலியில் நடைபெற்றது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இந்த முன்னோடித் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது.
அப்போது, பேருந்து உரிமையாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, தென் மாகாணத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


