"வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் தொனிப்பொருளின் கீழ், பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான வேலைத்திட்டமான, "மறுமலர்ச்சி நகரம்" - 2025 உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (19) நாடு முழுவதும் உள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் நடைபெற்றது.
இன்று இலக்கியம், கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினம் என பெயரிட்டுள்ளதுடன், இன்றைய நாளில் பொழுதுபோக்கு நிகழ்வுகள், நூலக சேவைகளை பிரபல ஊடக கருவியாக மாற்றும் நிகழ்வு, நடை பவனி, வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு,"பசுமை நூலகம்" நிறுவுதல் மற்றும் "பசுமை நூலகம்"என்ற கோட்பாட்டை ஊக்குவித்தல், இலவச நூலக அங்கத்துவம் வழங்குதல், வாசகர்களை பாராட்டுதல், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசக சமூகங்களின் பங்குபற்றலுடன் போட்டிகளை நடாத்துதல், நடமாடும் நூலக சேவை வழங்குதல், முன்பள்ளி மாணவர்களுக்காக "கதைகளில் இருந்து சித்திரம் வரைவோம்" போன்ற நிகழ்வுகள், "அறிவை பகிர்ந்து கொள்வோம் - எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு நூல்களை வழங்குதல், Helping Elders திட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரஜைகளுக்கு நூல்கள் வழங்குதல், விசேட தேவைகளுடனான வாசகர்களுக்கு தகவல் பிரிவொன்றை நிறுவுதல், "உலகை புதிய கண்களால் பார்ப்போம்"என்ற தலைப்பின் கீழ் பாடசாலை மாணவர்களுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடனான வீடியோ தயாரிக்கும் போட்டி, வாசிப்பு முகாம், புத்தகக் கண்காட்சி, Smart Library - Uva இணையதளத்தை வெளியிடுதல் போன்ற பல நிகழ்வுகள் இதன்போது இடம் பெற்றன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு


