தென் மாகாண அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான தென் மாகாண சபையால் பெறப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று (09) மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் தலைமையில் மாத்தறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உள்ள காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டுக்காக, மாத்தறை மாவட்டத்தில் 1034 திட்டங்களுக்கு தென் மாகாண சபை ரூ.2047 மில்லியன் ஒதுக்கியுள்ளது, மேலும் இந்த 1034 திட்டங்களையும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் நிறைவேற்றுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.