மாத்தறை மாவட்ட சாசனரக்ஷக சபைக் கூட்டம், அகில இலங்கை சாசனரக்ஷ சபையின் செயலாளர் வணக்கத்திற்குரிய முகுணுவேல அனுருத்த நாயக்க தேரரின் தலைமையில் மாத்தறை மாவட்ட செயலகத்தின் காமினி ஜெயசேகர கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் சமயத் தகவல்கள், அறநெறிப் பாடசாலைகளின் தகவல்கள் மற்றும் கோயில் தகவல்களைத் தொகுப்பதில் தீவிரமாகப் பணியாற்றிய தெலிஜ்ஜவில சமயவர்தனராமதிகாரி நந்த தேரருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், புதிய இணையத்தளத்தை மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன திறந்து வைத்தார்.


