2026 மே 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 36 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகவே காணப்படும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழை பெய்யக் கூடும் என்பதுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.


