மோசமான வானிலை காரணமாக கண்டி-மஹியங்கனை வீதி மூடப்பட்டுள்ளது

மோசமான வானிலை காரணமாக கண்டி-மஹியங்கனை வீதி மூடப்பட்டுள்ளது
  • :
 
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மெதமஹனுவர முதல் ஹசலக வரையிலான கண்டி-மஹியங்கனை வீதியை நாளை (28) காலை 07.00 மணி வரை மூடுவதற்கு கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குழு தீரமானித்துள்ளது.

 கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, அந்த வீதிப பகுதியில் ஏற்பட்ட கடுமையான சேதம் மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட மண் மற்றும் கல் சரிவுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை மஹவெல கிராம சேவகர் பிரிவில் இரண்டு இறப்புகளும், கங்கொட கிராம சேவகர் பிரிவில் மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
 
ஏழு இடம்பெயர்ந்த முகாம்களில் சுமார் நூறு குடும்பங்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும், காணாமல் போனவர்களை மீட்க இலங்கை இராணுவம், பொலிஸ் மற்றும் கிராம மக்கள் ஏற்கனவே இணைந்து பணியாற்றி வருவதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலையீட்டைத் தொடர்ந்து கண்டி மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மேலும் தெரிவித்தார்.

Related Articles