கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் உள்ள மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் மகாவலி ஆற்றில் கட்டப்படும் கடைசி நீர்மின் திட்டமாகக் கருதக்கூடிய மற்றும் தேசிய மின் கட்டமைப்பில் 30.2 மெகாவாட் திறனைச் சேர்க்கும் கொத்மலே புதிய பொல்பிட்டிய 220kV/132kV மின் உற்பத்தி பாதையின் கட்டுமானப் பணிகளை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அண்மையில் (13) ஆய்வு செய்தார்.
மின்சாரத் தேவை அதிகமாக பயன்படுத்தப்படும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டம், டிசம்பர் மாதமளவில் தேசிய மின் கட்டமைப்போடு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


