மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேராசிரியர்கள் பிரிவு அனைத்தும் இன்று (04) முதல் தயார்

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேராசிரியர்கள் பிரிவு அனைத்தும் இன்று (04) முதல் தயார்
  • :
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு சாய்சாலை பயிற்சிகளை வழங்குவதற்காக அவசியமான உடலியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை பேராசிரியர் பிரிவு களுத்துறை போதனா வைத்தியசாலையில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.
 
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் சாய்சாலை பயிற்சி போன்றவற்றை முன்னேற்றுவதற்கும் எதிர்கால மருத்துவர்களுக்கு மற்றும் சுகாதாரத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உயர்கல்வி மற்றும் பயிற்சியை வழங்கும் களுத்துறை பிரதேச சுகாதார கல்வியின் மத்திய நிலையமாக உருவாக்கும் நோக்கில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவோ ஸ்தாபிக்கப்படுவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
 
அதன் கீழ் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் தற்போது மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மற்றும் குழந்தை மருத்துவப் பேராசிரியர் பிரிவு, மன நல பேராசிரியர் பிரிவு, ஆகிய பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 
ஆரம்பிக்கப்பட்டுள்ள உடலியல் நோய் பேராசிரியர் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பேராசிரியர் பிரிவு என்பவற்றினால் மருத்துவ மாணவர்களுக்கு கிளினிக் பயிற்சிக்காக அவசியமான பேராசிரியர் பிரிவு ஐந்தும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டன.
 
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போது நான்கு வருடங்களுக்காக சுமார் 400 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களில் நான்காம் வருட கல்வி செயற்பாடுகளில் ஈடுபடும் 100 மாணவர்களுக்கு அவசியமான பேராசிரியர் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பணிபுரைக்கமைவாக இந்த பேராசிரியர் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Related Articles