முன் பராய அபிவிருத்தியை கல்வி முறையின் ஒரு பகுதியாக இணைத்து கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து ஒரு தனிப் பிரிவை நிறுவி முன் பராய அபிவிருத்தியை தரமான நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றன.
"ஒரு பண்பாடான குடிமகன் - ஒரு முற்போக்கான பாதை" என்ற தலைப்பில் ஜூலை 31 ஆம் திகதி கண்டி தேசிய புலமைத்துவ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புலமைத்துவ உரையாடலில் கலந்துகொண்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றினார்.
#EducationReform


