நச்சு போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்திற்கு இணங்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 24 மணி நேர துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்ட சபையின் வேண்டுகோளின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற துரித தொலைபேசி இலக்கம், நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்த துல்லியமான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க உதவுகிறது.


