'நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது மரபுரிமை' தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் 1,000 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறு நீர்ப்பாசனக் கருத்திட்டம் மற்றும் சிறுகுளத்தொகுதி முறைமை என்பது, வரலாற்று ரீதியாகப் பரிணமித்துள்ள, சமுதாயத்தை மையமாகக் கொண்ட நீர் முகாமைத்துவ முறைமையாக அமைவதுடன், அவற்றை கிராமிய கமத்தொழில் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை நிலைபேறான வகையில் பேணிச் செல்வதற்கு பங்களிப்புச் செய்துள்ளது. ஆயினும், வண்டல் களிமண் படிவு, கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள், நீர்ப்பாசன வினைத்திறன் குறைந்தமை, சிறுகுளத்தொகுதிகளை அண்டிய பாதுகாப்புப் பிரதேசங்களில் சட்டவிரோதக் குடியிருப்புக்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், குறித்த முறைமையானது விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலைமைக்கு மாறியுள்ளது.
அதனால், சிறு கிராமிய கருத்திட்டங்கள், சிறுகுளத்தொகுதி முறைமை மற்றும் கிராமங்களை மையமாகக் கொண்ட கமத்தொழில் அலகுகளில் விவசாயப் பசுமை மற்றும் கிராமியப் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு 'நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது மரபுரிமை' எனும் பெயரிலான தேசிய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது


