நியாயமற்ற முறையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது

நியாயமற்ற முறையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது
  • :

இலங்கை சமூகம் ஒற்றுமையாகவும் முன்மாதிரியாகவும் செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், நியாயமற்ற முறையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இலாபம் ஈட்ட முயற்சிப்பது

நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலையைப் பயன்படுத்தி விலைகளை உயர்த்துதல், தேவையில்லாமல் பொருட்களை பதுக்கி வைத்தல், நியாயமற்ற அல்லது மோசடியான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்ச சில்லறை விலை பட்டியலிடப்பட்ட பொருட்களை அதே விலையிலும், பிற பொருட்களை நியாயமான விலையிலும் விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருட்களை தொடர்ந்தும் வழங்கப்படுவதை அனைத்து விற்பனையாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles