சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது மதிய உணவை பரித்தியாகம் செய்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளின் 2025 டிசம்பர் 1 (நேற்று) தமது மதிய உணவிற்கு பயன்படுத்தும் உலர் உணவுப் பொருட்களை சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்காக பரித்தியாகம் செய்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையின்சிரேஷ்ட சிறைச்சாலை கண்காணிப்பாளர் ராஜீவ் எஸ். சில்வா, சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் ஆகியோரால் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவிடம் உலர் உணவுப் பொருட்கள் நேற்று (01) காலை கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
சிறை நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையின் ஆண் மற்றும் பெண் பிரிவுகளைச் சேர்ந்த 3874 கைதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் மதிய உணவை பரித்தியாகம் செய்துள்ளனர்.
750 கிலோ நாட்டு அரிசி, 50 பாக்கெட் தேங்காய் கிரீம், 100 கிலோ கொண்டைக்கடலை, 100 கிலோ கௌபி, 10 கிலோ பயறு, 60 கிலோ சோயா, 100 கிலோ சீனி, 10 கிலோ தேயிலை, 10 கிலோ மிளகாய் தூள், 30 கிலோ உப்பு மற்றும் 100 கிலோ மைசூர் பருப்பு ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளனர்.


